3ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது !

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லம்கோடு அருகே இருக்கிறது காஞ்சம்புரம் கிராமம். இங்கிருக்கும் கலிங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன்(53). கூலித்தொழிலாளியான இவர் அந்த பகுதியில் மரம் ஏறும் தொழில் பார்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகே ராஜி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னும் சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். 8 வயது சிறுமியான இவர் அங்கிருக்கும் ஒரு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறார்.

ஒரே பகுதியில் இருப்பதால் சிறுமியிடம் ஸ்ரீதரன் அடிக்கடி பேச்சுக்கொடுத்துள்ளார். அவரது குடும்பத்தினருடனும் பழகி வந்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று சிறுமி வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஸ்ரீதரன் சிறுமியிடம் பேச்சுக்கொடுத்து தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின் சிறுமி தனது பேத்தி வயதில் இருப்பதையும் பொருட்படுத்தாமல் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அதைப்பற்றி அறியாத சிறுமி அழுதுகொண்டே வீட்டிற்கு சென்றுள்ளார். குழந்தை அழுவதை கண்டு பதறிப்போன பெற்றோர் விசாரித்த போது, ஸ்ரீதரன் செய்தவற்றை சிறுமி கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர்கள் அக்கம்பக்கத்தினருடன் சென்று ஸ்ரீதரனிடம் தகராறு செய்தனர். அப்போது அங்கிருந்த சிலர் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின் அவர் மீது மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் ஸ்ரீ தரனை கைது செய்த காவல்துறையினர் போக்சோ வழக்கில் சிறையில் அடைத்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.