முகநூல் மூலம் பெண்ணொருவரை காதலித்த யாழ் இளைஞர்! கிளிநொச்சி காதலி கொடுத்த அதிர்ச்சி!

முகநூல் மூலம் பெண்ணொருவரை காதலித்த யாழ் இளைஞன் ஒருவர் காதலித்த பெண்ணை நேரில் கண்டதும் அதிர்ச்சியடைந்து தாக்கிய நிலையில், குறித்த சம்பவம் பொலிஸ் நிலையம் வரை சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவர் முகநூலில் அறிமுகமான ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்துள்ளார். அழகான இளம் பெண்ணின் படங்களை பதிவேற்றம் செய்த குறித்த பெண் , அது தான் கூறி வந்துள்ளார்.

இருவரும் பேஸ்புக், தொலைபேசியில் கதைத்து காதலை வளர்த்துக் கொண்டதுடன், தற்கால பரிசுகளான போன் ரீலோட், மற்றும் சின்னச்சின்ன பரிசுகளை காதலிக்கு அனுப்பி வந்த இளைஞன், அதன்பின்னர் அவருக்கு மோதிரம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் காதலியை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்து வந்தபோதும், காதலி பல காரணங்களை கூறி அதனை தவிர்த்து வந்துள்ளார். எனினும், இளைஞன், தொடர்ந்து வலியுறுத்தவே காதலியும் அதற்கு சம்மதம் தெரிவித்தார்.

காதலியை காணும் ஆர்வத்துடன், நண்பர்கள் மூவரை அழைத்துக் கொண்டு கடந்த சில தினங்களின் முன்னர் இளைஞர் கிளிநொச்சிக்கு விரைந்துள்ளனர்.

இந்நிலையில் காதலியை நேரில் காணும்ஆர்வத்தில் சென்றவருக்கு, காதலியை நேரில் கண்டதும் பேரதிர்ச்சியடைந்தார்.  காரணம், வந்த யுவதி முகப்புத்தகத்தில் பதிவேற்றியிருந்த புகைப்படத்திற்குரியவர் அல்ல என்பதுடன், அவர் 35 வயதானவர் என்பதும் இளைஞருக்கு தெரியவந்தது.

இதனையடுத்து போலியான புகைப்படம் போட்டு தன்னை ஏமாற்றி விட்டதாக ஆத்திரமடைந்த இளைஞன் , அந்த பெண்ணை கடுமையாக தாக்கியதுடன் அவரின் நண்பர்களும் யுவதியை தாக்கியுள்ளனர்.

அங்கு பெரும் களேபரம் ஏற்பட்டதையடுத்து, சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் , அங்கு சென்ற பொலிசார், அனைவரையும் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்த பின்னர், இரு தரப்பையும் சமரசம் செய்து, அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது