யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் இன்று உத்தியோகபூர்வமாக பதவியேற்பு!

யாழ்.மாவட்டத்தின் அரசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் இன்று காலை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.

ஆட்சிமாற்றத்தின் பின்னர் வடக்கின் 5 மாவட்டங்களினதும் அரச அதிபர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர்.

இதன்படி யாழ்.மாவட்ட செயலராக கடமையாற்றிய என்.வேதநாயகன் ஓய்வு பெற்று சென்றுள்ளார்.

இந்நிலையில் புதிய அரசாங்க அதிபராக மட்டக்களப்பின் மைந்தன் க.மகேசன் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றுகாலை உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.