என்னிடம் பணம் எதுவும் இல்லை, வெளிப்படையாக பேசிய பிரபல நடிகை…..

தமிழில் வெளிவந்த மைனா என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அமலா பால். இதன்பின் விக்ரம், விஜய், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார் அமலா.

இவர் சென்ற வருடம் நடித்து வெளிவந்த ஆடை படம் கூட விமர்சன ரீதியாக மிக பெரிய வெற்றி அடைந்தது.

இந்நிலையில் அண்மையில் விருது விழா ஒன்றில் இப்படத்திற்காக விருது வாங்க சென்றிருந்தார் நடிகை அமலா பால்.

அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய இவர் “நான் ஒரு படத்தை தயாரித்து வருகிறேன் அதனால் என்னிடம் எந்த பணமும் இல்லை. நீங்கள் எதாவது பணம் வைத்திருந்தால் தாருங்கள்” என்று விளையாட்டாக பேசினார் நடிகை அமலா பால்.