வெளிநாட்டில் பணியாற்றிவந்த மனைவியை பார்க்க சென்று போட்டுத்தள்ளிய கணவன்..

துபாய் நாட்டில் இருக்கும் அலுவலகத்தில், இந்திய நாட்டினை சார்ந்த 44 வயதுடைய நபரின் மனைவி பணிசெய்து வருகிறார். இவரது கணவர் மற்றும் இவரது இரண்டு மகள்கள் இந்தியாவில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், துபாயில் பணியாற்றி வரும் மனைவியின் நடத்தையின் மீது சந்தேகம் கொண்ட கணவர், கடந்த செப்டம்பர் மாதத்தின் போது விசிட் விசாவில் சென்றுள்ளார். இந்த நேரத்தில், மனைவியின் அலைபேசியில் அவருடன் பணியாற்றி வரும் நபர்களின் குறுஞ்செய்தி தொடர்பான பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில், மனைவியுடைய அலுவலகத்திற்கு நேரடியாக சென்ற கணவன் நிறுவன உரிமையாளருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதன்பின்னர் அங்குள்ள கார் நிறுத்தத்திற்கு இருவரும் வந்த நிலையில், எதற்க்காக இவ்வாறு சண்டையிடுகிறீர்கள் என்பது தொடர்பான பிரச்சனை நடைபெற்றுள்ளது.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், கணவன் தனது மனைவியை குத்தி கொலை செய்து தப்பி சென்றுள்ளார். இது தொடர்பான விஷயத்தை அறிந்த காவல் துறையினர், தப்பி செல்ல முயன்ற கணவனை கைது செய்தனர். இது தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.