திடீர் திருமணம் குறித்து மனம் திறந்த சீரியல் நடிகர்..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்னும் சீரியல் அண்மையில் ஆரம்பித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த சீரியல் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படி சீரியல் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில் இது வரும் சீரியல் நாயகனுக்கு திடீர் திருமணம் முடிந்துள்ளது.

வயலூரில் உள்ள கோவிலில் இவருக்கு திருமணம் நடந்துள்ளது. ஆனால் மணப்பெண் யார் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. திருமண பந்தத்தில் இணைந்துள்ள அழகிய ஜோடியின் புகைப்படம் மட்டும் லீக்காகி ஆகி இருந்தது.

இந்த நிலையில், இது குறித்து நடிகர் வினோத் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இதனால் சகல மக்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்.. ஆமாங்கோ! கல்யாணம் ஆகிடுச்சுங்கோ. லவ் பண்ணுங்கோ பாஸ் லைப் நல்ல இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.