இயக்குனருடன் சண்டை போட்ட விஜய் தேவரகொண்டா…

விஜய் தேவரக்கொண்டா நடிப்பில் நேற்று ரிலீஸ் ஆனது World Famous Lover படம். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்ரின் தெரசா, ராசி கண்ணா, Izabelle Leite என நான்கு ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

நேற்று வெளியான இந்த படத்திற்கு அதிக நெகடிவ் விமர்சனங்களே வந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தின் இயக்குனருடன் விஜய் தேவரகொண்டா சண்டை போட்டுள்ளார் என்பதும், அவருடன் தற்போது பேசுவது கூட கிடையாது என்ற தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

இயக்குனர் கிரந்தி மாதவ் கூறிய கதை தனக்கு பிடித்திருந்ததால் தான் அவர் நடிக்க ஒப்புக்கொண்டாராம், ஆனால் அவர் படமாக்கும் விதம் அவருக்கு பிடிக்காமல் போயுள்ளது. அதனால் ஷூட்டிங் நடக்கும் போதே அதிக இடங்களில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

மேலும் அதன் பிறகு விஜய் தேவர்கொண்டாவே படத்தில் சில மாற்றங்களை செய்துள்ளார். அர்ஜுன் ரெட்டி இயக்குனரை வைத்து சில காட்சிகளை மீண்டும் ஷூட் செய்தாராம் அவர்.

இந்த பிரச்சனைகளால் கோபமான இயக்குனர் கிரந்தி மாதவ் World Famous Lover படத்தின் எந்த விளம்பர நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லையாம்.