மதுபோதையில் சக நண்பரிடம் தகாத முறையில் செய்த காரியம்.!

சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஆட்டையாம்பட்டி அருகே பெரிய சீரகபாடியைச் சேர்ந்த முருகன் தறிபட்டறை ஒன்றை நடத்தி வருகின்றார். இவருடைய   பட்டறையில் ரமேஷ் மற்றும் வெங்கடாசலம் ஆகிய இருவர் வேலை செய்து கொண்டு இருக்கின்றனர்.

இந்தநிலையில் கடந்த 12ஆம் தேதி ரமேஷ், குருவி சுடும் துப்பாக்கி ஒன்றை எடுத்து கொண்டு தனது பட்டறைக்கு வந்துள்ளார். அப்போது அவர் மிகவும் போதையில் இருந்துள்ளார். இதையடுத்து அவர் தன்னிடம் துப்பாக்கி இருப்பதாக முருகன் மற்றும் வெங்கடாசலம் இருவரிடமும் காண்பித்து இருக்கின்றார்.

அதன் பின்னர் அவர்கள் இருவரையில் அந்த துப்பாக்கியை கொண்டு சுட்டுள்ளார். இதன் காரணமாக முருகனின் தோள்பட்டையிலும், வெங்கடாசலத்தின் காலிலும் குண்டு பாய்ந்து இருக்கின்றது. எனவே, வழியில் இருவரும் சத்தம் போட அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்து இருக்கின்றனர்.

மதுப்பழக்கம் கொண்டிருந்த ரமேஷ் மனைவியை விவாகரத்து செய்து தனியே இருந்துள்ளார். இதன் காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டு அவர் இருந்துள்ளார். எனவே, தான் இருவரையும் சுட்டு இருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது.