போதையில் வரும் கணவனை மிரட்ட தீயில் எரிந்து உயிரிழந்த மனைவி!! யாழில் சம்பவம்!!!

தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்ட பெண் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார். தனது கணவனை அச்சுறுத்துவதற்காக தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டபோது தவறுதலாகத் தீப்பற்றிக் கொண்டதிலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவம் யாழ்.குருநகர்ப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் விதுஜா (வயது-21) என்ற இளம் குடும்பப் பெண்ணே உயிரிழந்தவர் ஆவார்.