சாம்சுங் நிறுவனம் விரைவில் Galaxy S20 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை விற்பனை..!!

சாம்சுங் நிறுவனம் விரைவில் Galaxy S20 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை விற்பனைக்கு விடவுள்ளது.

இந்நிலையில் கடந்த 11 ஆம் திகதி குறித்த கைப்பேசி உத்தியோபூர்வமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது கைப்பேசியின் சிறப்பியல்புளும் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி Galaxy S20 ஆனது அல்ட்ரா 108 மெகாபிக்சல்கள் உடைய கமெராவினை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 8K வீடியோக்களை பதிவு செய்ய முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட கைப்பேசிகளில் ஆகக் கூடுதலாக 4K வீடியோக்கள் வரை மாத்திரமே பதிவு செய்யக்கூடியதாக இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.