மாதவிடாய் வலி உங்களை கொல்லுதா? தீர்வு இதோ ?

பொதுவாக மாதவிடாய் சமயங்களில் எல்லா பெண்களுக்கு வயிறு வீக்கம், மார்பக காம்புகளில் புண்கள், தலைவலி, எரிச்சல் மற்றும் மனநிலை மாற்றங்கள் இருக்கும்.

அதுவும் மாதவிடாய் காலத்தில் கருப்பையின் தசைகள் சுருங்குவதால் வலி உண்டாகிறது.

மூன்று நாட்களுக்கு இரத்தம் திசுக்கள், வெளியேற்றப்படுகிறது. இதனால் ஏற்படும் சுருக்கம் அடிவயிற்று பகுதியில் அழற்சியை ஏற்படுத்துகிறது.

இதுபோன்ற சமயங்களில் சில பெண்கள் வலியை தாங்க முடியாமல் சுருண்டு படுத்துக் கொள்வார்கள்.

இதற்கு அடிக்கடி மருத்துகள் உட்கொள்ளுவதை தவிர்த்து விட்டு சில உணவுகள் மூலம் இந்த வலியை கட்டுப்படுத்த முடியும்.

தற்போது அந்த உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • மல்லாக்க படுத்து ஒரு சுத்தமான காட்டன் துணியை சுடுநீரில் நனைத்து பிழிந்து விட்டு வயிற்று பகுதியில் ஒத்தடம் கொடுங்கள். இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து வலியை குறைக்க உதவுகிறது.
  • ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய உணவுகளை மாதவிடாய் காலங்களில் எடுத்துக் கொள்ளுங்கள். மீன் இல்லையென்றால் மருத்துவரின் பரிந்துரை பேரில் மீன் எண்ணெய் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.
  • மாதவிடாய் சமயங்களில் கொஞ்சம் இஞ்சியை போட்டு டீ போட்டு குடியுங்கள். ஏனெனில் இஞ்சி டியோன்கள் போன்ற அழற்சி எதிர்ப்பு பண்புகள் வயிற்று பிடிப்பிற்கு காரணமான அழற்சியை விரட்டுகிறது.
  • மாதவிடாய் காலங்களில் மக்னீசியம் அதிகமான உணவுகளான பாதாம் பருப்பு, கீரை, முந்திரி, வேர்க்கடலை, கருப்பு பீன்ஸ் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • மாதவிடாய் காலங்களில் வயிற்று பிடிப்புகள் இருந்தால் ஒரே இடத்தில் படுக்காமல் சிறிது தூரம் நடந்து செல்லுங்கள். முடிந்தால் லேசான கார்டியோ உடற்பயிற்சி கூட செய்யலாம்.