மாணவர்களை ஏற்றிய பேருந்தும், புகையிரதமும் மோதி விபத்து!

கொழும்பு, கொலன்னாவையில் எரிபொருள் புகையிரதத்துடன் மாணவர்களை ஏற்றிச்சென்ற பாடசாலை பேருந்து ஒன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இன்று மதியம் இந்த விபத்து நேர்ந்தது.

தெய்வாதினமாக உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.