குடிவரவு குடியகல்வு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது!

குடிவரவு குடியகல்வு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

இந்நிலையில் இதற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் பசன் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த சட்ட மூலம் சட்டவரைஞர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை 1948 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க குடிவரவு குடியகல்வு சட்டம் இதற்கு முன்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் திருத்தப்பட்டுள்ள போதிலும், முழுமையான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.