கிஸ் டேவுக்காக விஜய் செய்த காரியத்தை பாருங்கள்.!

நடிகர் விஜய் தேவரகொண்டா தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நடிகர் ஆவார். அர்ஜுன்ரெட்டி படத்தில் நடித்ததன் மூலம் அவர் உலகம் முழுவதும் பிரபலம் ஆனார். இதனைத் தொடர்ந்து கீதாகோவிந்தம், நோட்டா, டியர் காம்ரேட் என்று பல்வேறு வெற்றி படங்களை குவித்து நன்கு கல்லா கட்ட துவங்கினார்.

தற்பொழுது நடிகர் விஜய் தேவரகொண்டா கிராந்தி மாதவ் இயக்கிவரும் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்,ராஷி கண்ணா, கேத்ரீன் தெரசா, இசபெல் லெய்ட் ஆகிய நான்கு ஹீரோயின்கள் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் மூன்று கதாநாயகிகள் விஜய்தேவரகொண்டாவிற்கு காதலிகளாகவும், நடிகை ஐஸ்வர்யா-ராஜேஷ் மனைவியாகவும் நடித்திருப்பதாக காட்டப்படுகிறது.

இந்த படத்தில் கூட விஜய்தேவரகொண்டாவிற்கு கோபக்கார இளைஞன் கேரக்டரே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் குறித்த போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து, இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது. நாளை காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படம் வெளியாகி இருக்கின்றது.

இந்நிலையில், இன்று காதலர்களால் கொண்டாடப்படும் கிஸ் டேவுக்கு வாழ்த்து கூற தான் அப்படத்தில் ராஷிக்கண்ணாவுடன் கிஸ் கொடுத்த சீனை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

Yaminiiiiiiiiiiii ? This Valentine’s Day Come fall in Love ? #WorldFamousLover.

A post shared by Vijay Deverakonda (@thedeverakonda) on