காதலுக்கு பெற்றோர்கள் சம்மதித்தும், காதல் ஜோடியின் விபரீத ஆசை..!! நடந்த சோகம்

தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் உள்ள பீமநகர் பகுதியை சார்ந்தவர் ரம்யா (வயது 21, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். இவரது வீட்டின் எதிரில் உள்ள வீட்டில் வாலிபர் வசித்து வந்துள்ளார்.

இவருக்கும் – ரம்யாவிற்கும் இடையே ஏற்பட்ட நட்பு ரீதியான பழக்கமானது பின்னாளில் காதலாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதல் விவகாரம் இருவரின் பெற்றோருக்கும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இருவருக்கும் படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்த நிலையில், கடந்த சில நாட்களாகவே மாணவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன்பின்னர் மாணவியை அங்குள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பெற்றோர்கள் அழைத்து சென்றுள்ளனர்.

மருத்துவமனையில் ரம்யாவை சோதனை செய்த மருத்துவர்கள், அவர் 5 மாத கர்ப்பமாக இருப்பதாகவும், இவரது வயிற்றில் உள்ள சிசு இறந்த நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இறந்த சிசுவை உடனடியாக அகற்றவும் செய்துள்ளனர்.

மகளின் கர்ப்ப விவகாரத்தை கேட்டு அதிர்ச்சியில் இருந்த பெற்றோர் மேற்கொண்ட விசாரியில், காதலனுடன் அவனது வீட்டில் தனிமையில் இருந்தது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், வாலிபர் தற்போது பணிக்காக வெளிநாடு சென்றுள்ளார்.

ரம்யா கல்லூரி பயின்று வரும் மாணவி என்பதால் மருத்துவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், ரம்யாவின் காதலர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து முதற்கட்ட விசாரணையோடு காவல்துறையினரின் விசாரணை நிறைவு பெற்றுள்ளது.