ப்ரண்ட்ஸ் பட குட்டி விஜய் இப்ப எப்படி இருக்காரு.. பாருங்களேன்.!

விஜய்-சூரியா இணைந்து 2002ஆம் ஆண்டு நடித்த மெகா ஹிட் படம் தான் ப்ரண்ட்ஸ். இந்த படத்தில் வரும் சின்ன வயசு விஜய் கேரக்டரில் சின்ன பையனாக நடித்து இருப்பவரின் உண்மையான பெயர் மற்றும் அவர் குறித்த விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.

அவரின் உண்மையான பெயர் பரத் ஜெயந்த். 1988ல் சென்னையில் பிறந்தவர். பிரண்ட்ஸ் படத்தில் நடிக்கும் பொழுது பரத்திற்கு 14 வயது இருக்கும். அவர் எம் சி டி எம் சர்வதேச பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து இருந்தார். அதன் பின்னர், லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பு மற்றும் எம்பிஏ முடித்தார்.

அதன் பின்னர் மாடலிங் துறையில் அவர் பணிபுரிந்து வந்தார். மாடலாக வலம் வந்த பரத், பிரண்ட்ஸ் படத்தில் நடித்த பின்னர் வானத்தைப்போல மற்றும் பிரியமான தோழி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். படிப்புக்கு சிறிது காலம் முழுக்கு போட்டு விட்டு தன்னுடைய முழு கவனத்தையும் படிப்பில் காட்டினார்.

சில ஆண்டுகள் கழித்து இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் இளமை நாட்கள் என்னும் படத்தில் அவர் நடித்து இருந்தார். தற்போது அஜய் ஞானமுத்து இயக்கிவரும் அதர்வா – நயன்தாரா இணைந்து நடிக்கும் படத்தில் அசிஸ்டெண்ட் டைரக்டராக அவர் பணிபுரிந்து வருகின்றார்.