பத்தாம் வகுப்பு மாணவியை ஆறு நாட்கள் தனி வீட்டில் வைத்து சீரழித்த மாணவன்……

பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் ஆறுநாட்களாக தனி வீட்டில் அடைத்து வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்த பொறியியல் படித்துவரும் முதலாமாண்டு மாணவர் போக்சோ சட்டத்தில் கைதாகியிருப்பது கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம் அணைக்கரையில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரை கடந்த ஆறு நாட்களாக காணவில்லை என மாணவியின் தாயார் லதா திருப்பனந்தாள் காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரை அடிப்படையாக வைத்து விசாரனையை நடத்திய பந்தநல்லூர் ஆய்வாளர் சுகுனாவும், திருப்பனந்தாள் ஆய்வாளர் கவிதாவும். கடந்த 6 நாட்களாக மாணவி பழக்கவழக்கத்திலிருந்த பத்துக்கும் மேற்பட்ட நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், அணைக்கரை விநாயகர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் மாணவியை அடைத்து வைக்கப்பட்டிருந்தது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த வீட்டிற்க்கு விரைந்த காவல் ஆய்வாளர்கள் சுகுணா மற்றும் கவிதா சக போலீஸாரும் அந்த வீட்டை முழுமையாக ஆய்வு நடத்தினர். அப்போது மாணவி சுவருக்கும் பிரோவுக்கும் இடையில் பல்லியைப்போல் ஒட்டியிருந்தவரை கண்டுபிடித்து அந்த மாணவியை போலீசார் அங்கிருந்து மீட்டனர்.

இதையடுத்து, அந்த பெண்ணிடம் ஆய்வாளர் சுகுணா மேற்கொண்ட விசாரணையில், கடந்த 6 நாட்களாக அந்த மாணவியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது, மேலும் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது ராஜா என்ற 17 வயதான கல்லூரி மாணவன் என்பதும் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, ராஜாவை போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்தனர். அந்த ராஜா தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறான், அவனின் பெற்றோர்கள் இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட அந்த மாணவன் இதுபோன்ற காரியத்தில் ஈடுபட்டுள்ளான். அந்த மாணவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர், இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி தஞ்சையிலுள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ராஜாவை ஒப்படைத்துள்ளனர்.