தண்ணீர் என்று நினைத்து குடித்த நபர்.!

ஐம்பது வயது மதிக்கத்தக்க நபரொருவர் ஜிம் ஒன்றில் தீவிரமாக உடற்பயிற்சி மேற்கொண்டு வருகின்றார். அப்போது, அவருக்கு பின்புறத்தில் ஒரு தம்ளரில் நீர் போன்ற திரவம் இருக்கின்றது.

கடுமையான உடற்பயிற்சியை அவர் மேற்கொண்டு இருக்கும் பொழுது அந்த உடற்பயிற்சி கூடத்திற்கு வந்த மற்றொரு நபர் அவருக்கு தெரியாமல் பின்னால் இருப்பதை தண்ணீர் என்று நினைத்து எடுத்து குடித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி தூரத்தில் நின்று வேடிக்கை பார்க்கிறார்.

அப்போது கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்ட நபர் உடற்பயிற்சி செய்த பின்னர், தன்னுடைய உடலில் ஏற்படும் வியர்வையை ஒரு டவலால் துடைத்து அந்த வியர்வைத் துளிகளை எடுத்து டம்ளரில் சேமித்து வைக்கின்றார்.

இதை கண்டவுடன் அந்த டம்ளரில் இருப்பதை தண்ணீர் என்று நினைத்து குடித்த இளைஞரின் முகம் சோகத்தில் வாடுவதை நாம் காணமுடிகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும் இதற்கு பதில் ஒரு டம்ளர் விஷத்தை குடித்து இருக்கலாம் என்று கிண்டல் செய்து வருகின்றனர்.