விற்பனையில் சரித்திரம் படைத்தது ஆப்பிள் கடிகாரம்

பொதுவாக சுவிட்ஸர்லாந்து நாட்டின் கடிகாரங்களுக்கு உலகெங்கிலும் மிகுந்த மதிப்பு காணப்படுகின்றது.

எனினும் இதனைத் தாண்டி ஆப்பிள் கடிகாரம் சுவிட்ஸர்லாந்தில் புதிய சரித்திரம் படைத்துள்ளது.

அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டில் சுமார் 30 மில்லியன் ஆப்பிள் கடிகாரம் அங்கு விற்று தீர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை Strategy Analytics அமைப்பு வெளியிட்டுள்ளது.

ஸ்மார்ட் தொழில்நுட்பத்தினைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட கடிகாரங்களுக்கு தற்போது உலகெங்கிலும் பலத்த வரவேற்பு காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையிலேயே ஆப்பிள் நிறுவனம் இச் சாதனையை நிலைநாட்டியுள்ளது.

மேலும் கடந்த வருடம் ஆப்பிள் கடிகார விற்பனையானது 36 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.