லண்டனில் இளைஞரிடம் மயங்கி நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்து கொண்ட சிறுமி!

கனடாவின் லண்டன் நகரில் சிறுமியை கவர்ந்து அவரின் நிர்வாண புகைப்படங்களை வாங்கி கொண்டதோடு, பாலியல் தொல்லையும் கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தின் லண்டன் நகரை சேர்ந்த Moises Jonathan Aragon Godinez (26) என்ற இளைஞர் கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேவாலயத்தில் 16 வயதுக்கும் குறைவான சிறுமியை சந்தித்து நட்பாகியுள்ளார்.

இதற்கு முன்னரே இருவரும் இன்ஸ்டாகிராம் சமூகவலைதளம் மூலம் நட்பான நிலையிலேயே முதல் முறையாக தேவாலயத்தில் சந்தித்து கொண்டனர்.

பின்னர் இருவரும் சில தடவைகள் சந்தித்து கொண்டதோடு தங்களின் நிர்வாண புகைப்படங்களை அவர்களுக்குள்ளேயே பகிர்ந்து கொண்டனர்.

இதோடு சிறுமிக்கு Moises பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார்.

இந்த விடயம் தற்போது தான் வெளியில் தெரிந்துள்ள நிலையில் பொலிசார் கடந்த வெள்ளிக்கிழமை அன்று Moises-ஐ கைது செய்தனர்.

அவர் மீது 16 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 16 வயதுக்கு கீழான சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது, நிர்வாண புகைப்படங்களை அனுப்பியது உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் Moises மூலம் மேலும் சிலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.

கைது செய்யப்பட்ட Moises மார்ச் மாதம் 23ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.