தாய்க்கு பாலியல் தொல்லை கொடுத்த மகன்!

சென்னையில் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்து வந்த மகன் கூலிப்படையை ஏவி கொலை செய்யப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது.

ஆவடியை அடுத்த வத்சலாபுரம் 3வது தெருவில் இருக்கும் பாழடைந்த வீட்டிலிருந்து கடந்த 2ம் திகதி காலை இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து விசாரணையை தொடங்கிய திருநின்றவூர் பொலிசார் அருகிலிருக்கும் சிசிடிவி கமெராக்களை ஆய்வு செய்தனர்.

அதில் மூன்று மர்ம நபர்கள் பைக்கில் செல்வது தெரியவந்தது, அந்த வண்டி எண்ணை கொண்டு ஆய்வு செய்ததில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, கன்னிகாபுரத்தைச் சேர்ந்த 47 வயதான அஞ்சலி என்பவரது முகவரி கிடைத்தது.

அவரிடம் விசாரணை செய்ததில் கொலை செய்யப்பட்டு கிடந்தது அவரது வளர்ப்பு மகன் 19 வயதான சதீஷ் என்பது தெரியவந்தது.

சதிஷுக்கு கஞ்சா பழக்கம் இருந்ததால் அவரது நண்பர்களையும் பிடித்து விசாரித்தனர். அதே நேரம் அஞ்சலியின் ஹோண்டா வாகனம் இரும்பு கடையொன்றில் இருந்து மீட்கப்பட்டது.

அதை யார் அங்கே விட்டு சென்றார்கள்? என பொலிசார் நடத்திய தொடர் விசாரணையில் கட்டட மேஸ்திரியான காமராஜ் என்பவருக்கு தொடர்பிருப்பதும், அஞ்சலியின் கள்ளக்காதலன் என்பதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அஞ்சலியிடம் விசாரித்ததில், பெற்றோரை இழந்த சதீசை எடுத்து வளர்த்து வந்துள்ளார்.

இளைஞனாக வளர்ந்ததும் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான சதீஷ், அஞ்சலியிடமே தவறாக நடக்க முயன்றுள்ளார்.

இதனால் தொல்லை தாங்க முடியாமல் காமராஜிடம் இதைப்பற்றிகூற, அவரோ நண்பர்கள் உதவியுடன் சதீஷை கொலை செய்ய திட்டமிட்டார்.

இதன்படி கஞ்சாவை கொடுத்து பாழடைந்த வீட்டில் வைத்து சதீஷை கொன்றனர், இந்த வழக்கில், சதீஷை வளர்த்து வந்த அஞ்சலி, அவரது கள்ளக்காதலன் காமராஜ், கூலிப்படையைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் விக்னேஷ் ஆகிய 4 பேரையும் போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.