காதலர் தினத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு காத்திருக்கும் மிக பெரிய ஆப்பு?

பெப்ரவரி மாதம் பிறந்ததுமே சட்டென்று நினைவுக்கு வருவது காதலர் தினம்தான்.

காதலிக்கு அல்லது காதலருக்கு பரிசு வாங்கவும், காதலை வெளிப்படுத்தவும் இதை ஒரு சந்தர்ப்பமாக இளைஞர்கள் பலர் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு வருகின்ற காதலர் தினத்தை முன்னிட்டு உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷத்தில் சுக்கிரன் இருப்பதாலும், செவ்வாய் தனுசு ராசியில் இருப்பதாலும் இந்த காதலர் தினம் உங்களுக்கு அற்புதமானதாக இருக்கப்போகிறது.

நெருக்கமான ஆர்வம், ஒத்துழைப்பு, உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வது, காதல் நிறைந்த பயணம் என இந்த காதலர் தினம் மகிழ்ச்சியானதாக இருக்கும். உடல்ரீதியான நெருக்கத்திற்கும் உங்களுக்கு வாய்ப்புள்ளது.

ரிஷபம்

துரதிர்ஷ்டவசமாக இந்த காதலர் தினம் உங்களுக்கு நீங்கள் விரும்பக்கூடிய நாளாக இருக்கப் போவதில்லை.

உங்கள் ராசிப்படி சுக்கிரன் மற்றும் செவ்வாய் கிரகங்கள் இருக்கும் நிலைகள் உங்களுக்கு சாதகமாக இல்லாததால் உறவு சிக்கல்கள் ஏற்படலாம்.

இந்த நாளை சாதாரண நாளாக கடப்பதுதான் உங்களுக்கு நல்லது, இல்லையெனில் உறவுக்குள் மிகப்பெரிய குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடரீதியான நெருக்கத்தை முடிந்தவரை தவிர்க்கவும்.

மிதுனம்

உங்கள் ராசிப்படி சுக்கிரன் சாதகமான இடத்தில் இருப்பதால் உங்களுக்கு அனுகூலமான பலன்களை ஏற்படுத்தினாலும் செவ்வாய் இதற்கு எதிர்மறையாக தவறான இடத்தில் இருப்பதால் நீங்கள் உங்கள் துணையால் தவறாக புரிந்து கொள்ளப்பட வாய்ப்புள்ளது. மேலும் இந்த நாளில் பெரிய சண்டை ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகமுள்ளது.

இந்த நாளை மிகவும் எச்சரிக்கையுடன் கடக்க வேண்டும். தேவையற்ற சந்தேகங்கள், பதட்டங்கள் உங்களை பாடாய்ப்படுத்தும்.

கடகம்

உங்கள் கூட்டாளரை புரிந்து கொள்வது எளிதல்ல அல்லது அவருடைய தேவைகளை நீங்கள் நன்கு புரிந்து கொள்ளாமல் இருக்கலாம்.

இன்று ஆபத்து என்னவென்றால் உங்கள் காதல் முறிவடைய வாய்ப்புள்ளது. இந்த காதலர் தினத்தை கடத்துவது கத்தி மேல் நடப்பது போன்றதாக இருக்கும் உங்களுக்கு.

சிம்மம்

இந்த காதலர் தினம் உங்களுக்கு அருமையான நாளாக இருக்கப்போகிறது. இந்த காதலர் தினம் உங்களுக்கு அனைத்து விதமான உணர்வுகளும் நிறைந்த நாளாக இருக்கப்போகிறது.

இந்த தினத்தில் நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவு உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும். உங்கள் காதலை நீங்கள் அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல தாரளமாக முடிவெடுக்கலாம்.

கன்னி

உங்களுக்கு சுக்கிரன் மற்றும் செவ்வாய் கிரகத்தின் நிலைகள் அன்பு, உணர்வுகள் குறித்து மகிழ்ச்சியளிப்பதில்லை, அனைத்திற்கும் மேலாக சூரியன் பொருந்தா இடத்தில் இருப்பதால் உங்களுக்கும், உங்கள் துணைக்கும் இடையே பெரிய சண்டைகள், அதீத பதட்டம் போன்ற பிரச்சனைகள் எழ வாய்ப்புள்ளது.

அமைதியாக இருங்கள், அதிகம் பேசாதீர்கள், நீங்கள் விரும்பும் நபரிடமிருந்து அதிகம் எதிர்பார்க்காதீர்கள், உங்களைப் புரிந்து கொள்ளாதவரிடம் இருந்து தவறான புரிதலுக்கு தீர்வு காண முடியாது.

துலாம்

காதலர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த நாள் உங்களுக்கு அழகான நாளாக இருக்கப்போகிறது. ஆனால் சுக்கிரன் உங்களுக்கு எதிரான திசையில் இருப்பதால் நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு இந்த நாள் சுவராஸ்யமான நாளாக இருக்காது.

இன்று உங்களுக்கு கலவையான உணர்ச்சிகள் நிறைந்த நாளாக இருக்கும், நாளின் முடிவில் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாகத்தான் இருக்கும். உங்கள் துணையுடன் சமநிலையை பராமரிக்க முயலுங்கள்.

விருச்சிகம்

செவ்வாய் இரண்டாவது நிலையில் இருப்பதால் இந்த காதலர் தினத்தன்று நீங்கள் உங்கள் காதல் துணைக்கு அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். இது அவர்களை அதிக மகிழ்ச்சியாக உணர வைக்கும்.

சுக்கிரனின் நிலை சாதகமாக இல்லை என்றாலும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இல்லை. உங்கள் தோற்றத்தை கவர்ச்சிகரமானதாக மாற்ற முயலுங்கள்.

இரவு உணவின் போது கூட்டாளியின் கோரிக்கைகளை குறைத்து மதிப்பிடாதீர்கள். பாலியல் உறவை அதிகம் எதிர்பார்க்காதீர்கள்.

தனுசு

செவ்வாயும், சுக்கிரனும் சாதகமான இடத்தில் இருப்பதால் இந்த காதலர் தினம் உங்களுக்கு அற்புதமான நாளாக இருக்கும்.

இந்த நாளில் உங்கள் துணை உங்களிடம் மயங்குவார்கள், உணர்ச்சிகள் நிறைந்த நாளாக இது இருக்கும்.

அனைத்திற்கும் மேலாக உங்களுக்கு இடையேயான புரிதல் அதிகரிக்கும். நீங்களாக எதையும் தொடங்காதீர்கள் பொறுமையாக இருங்கள், நீங்கள் நினைப்பது தானாக நடக்கும்.

மகரம்

இந்த நாள் உங்களுக்கு சிக்கலான நாளாக இருக்கப்போகிறது. நாளின் முற்பகுதி சண்டைகளும், விவாதங்களும் நிறைந்திருந்தாலும் மாலை நேரத்தில் இனிமையான நேரம் தொடங்கும்.

வெளிப்படையாக பேசுவதைத் தவிர்க்கவும், ஏனெனில் உங்களின் சொற்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட வாய்ப்புள்ளது. எனவே வாயைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.

கும்பம்

இந்த காதலர் தினம் உங்களுக்கு கொண்டாட்டம் நிறைந்த நாளாக இருக்கப்போகிறது. உங்கள் துணையுடன் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் நெருங்குவீர்கள்.

வித்தியாசமான இடங்களுக்கு செல்வது சுவாரஸ்யத்தை அதிகரிக்கும். உங்கள் இருவரின் புரிதல் அதிகரிக்கும். உங்கள் எதிர்காலம் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்க இது சிறந்த நாளாகும்.

மீனம்

துரதிர்ஷ்டவசமாக உங்களுக்கு இந்த காதலர் தினம் சிறப்பான நாளாக இருக்காது. அதிக பதட்டத்துடன் காணப்படுவீர்கள், உங்கள் துணையின் தேவையை முடிந்தவரை நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள்.

நீங்கள் மிகவும் விலையுயர்ந்த பரிசை வழங்கவோ அல்லது அதிகப்படியான உற்சாகமான மற்றும் விலையுயர்ந்த இரவு உணவை ஒழுங்கமைக்கவோ தேவையில்லை. வீட்டிலேயே அமர்ந்து உங்களின் உணர்வுகளை பகிர்ந்து கொள்வது நல்லது.