முல்லைத்தீவில் குண்டுவெடிப்பு! வீட்டுக்குள் தாயும் சகோதரனும் அதிரடியாக கைது

முல்லைத்தீவில் குண்டுவெடிப்பு இடம்பெற்ற சிலாவத்தை வீட்டிலிருந்து மேலும் சில வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் பூட்டி இருந்த குறித்த வீட்டை பொலிஸார் சோதனை செய்த நிலையில் சுமார் மூன்று கிலோவுக்கு அதிகமான வெடிமருந்து பொருட்கள் வீட்டினுள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த நபர் தொடர்ச்சியாக இந்த வெடி பொருட்களிலிருந்து மருந்துகளை பிரித்தெடுத்து வியாபாரம் செய்த ஒருவராக இருந்திருக்க வேண்டும் எனவும் இவ்வாறான நிலையிலேயே இன்றும் குண்டு ஒன்றிலிருந்து மருந்தை பிரித்தெடுக்க முற்பட்ட நிலையிலேயே குண்டு வெடித்து இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை இந்த வெடி மருந்துகளுடன் சம்பந்தப்பட்ட இந்த வியாபாரத்தில் சந்தேகம் கொண்ட பொலிஸார் காயமடைந்த நபரின் தாயாரான குறித்த வீட்டின் உரிமையாளர் மற்றும் காயமடைந்த நபருடைய சகோதரனாகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

மேலும் தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் விசேட அதிரடிப்படையினரால் அவர்களுடைய வீடுகள் சோதனை செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

குறித்த சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.