மகிந்தவின் கூட்டத்தில் கருணாவிற்கு நேர்ந்த கதி!

இலங்கை முஸ்லிம்களின் இதயமாக கருதப்படும் கல்முனை மாநகரத்தை துண்டு துண்டாக வெட்டிவிட வேண்டுமென முஸ்லிம் விரோத சக்திகளின் கூட்டினால் மேற்கொள்ளப்பட்ட மொத்த சதி முயற்சிகளையும் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் சாதூரியத்தால் தவுடு பொடியாகியது.

தமிழ் ஆயுதக் குழுவால் பலத்காரமாக இனரீதியாக பிரிக்கப்பட்ட கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதுடன் முஸ்லிம்களுக்கு சொந்தமான நிலங்களையும், வர்த்தக நிலையங்களையும் பறித்தெடுப்பதற்கான சூழ்ச்சிகள் கருணா தரப்பினரால் கச்சிதமான முறையில் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு தளபதி கருணா அம்மாண் அவர்களின் ஏற்பாட்டில் கல்முனையை கூறுபோடுவதற்கான கூட்டம் நேற்று கொழும்பில் இடம் பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்திருக்கின்ற இச்சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்தி தமக்கான காய்நகர்த்தல்களை மேற்கொள்வதே இக் குழுவினரின் திட்டமாக இருந்தது.

இச் சதித் திட்டத்தை மோப்பம் பிடித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்கள் கூட்டம் நடைபெரும் இடத்திற்கே தன்னந்தனியாக சென்று தம் மண்ணை மீட்பதற்கான போராட்டத்தில் இறங்கினார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதித் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென கருணா தரப்பினரால் இக் கூட்டத்தில் வைத்த அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதை அரச தரப்பினரும் ஏற்றுக்கொண்டு தீர்மானங்களை நிறைவேற்ற முற்பட்ட போதுதான் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்களின் பிரசன்னம் இடம்பெற்றுள்ளது.

கருணா குழுவினரின் கோரிக்கை நியாயமற்றது எனவும் முஸ்லிம் தழிழ் சமூகங்களுக்கடையில் பிரிவினை வாதத்தை தூண்டுவதாகவும் உள்ளதாக ஹரீஸ் எம்.எபி தனது வாதத்தை

ஆரம்பித்தார்.அத்தோடு; கல்முனை பிரதேசத்தின் தற்போதைய சூழ்நிலை,வரலாற்று ஆவணங்கள், அதன் உண்மைத் தன்மைகள் தொடர்பாகவும் விரிவாக விளக்கமளித்தார்.அத்தோடு பிரதேச செயலகங்கள் இனரீதியாக பிரிக்கப்படுவது நாட்டின் சமாதானத்திற்கும் அபிவிருத்திக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் எடுத்துரைத்தார்.

இரண்டு தரப்பு நியாயங்களையும் ஏற்றுக் கொண்ட பிரதமர் தரமுயர்துவதற்கு முன்பு முதற்கட்டமாக எல்லை நிர்ணய சபையை அமைத்து இதற்குறிய அறிக்கையை பெற்றுக் கொள்ள வேண்டுமென உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரைவிடுத்தார்.

இதனை இரண்டு தரப்பினர்களும் ஏற்றுக் கொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் இக்கூட்டத்திற்கு சென்றிருக்காவிட்டால் கல்முனை மாநகரம் பல கேள்விக்குறிகளை இன்று தாங்கியிருக்கும்.