சினிமா பைனான்சியர் அன்புசெழியனிடம் ரூ.65 கோடி பறிமுதல்!

சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீடு, அலுவலகங்களில் 65 கோடி ரூபா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா பைனான்சியர் அன்புச்செழியன், பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ், நடிகர் விஜய் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் நேற்று வருமான வரித்துறை நடைபெற்றது. விடிய விடிய நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை இன்று 2வது நாளாக நீடிக்கிறது.

சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் கடந்த சில ஆண்டுகளாக வருமானவரி ஏய்ப்பு செய்ததாக கூறிய வருமான வரித்துறை அதிகாரிகள் அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகம், சினிமா நிறுவனம் மற்றும் பங்குதாராக உள்ள நிறுவனங்கள் உள்பட இடங்களில் சோதனை நடத்தியதாக குறிப்பிட்டனர்.

இந்த நிலையில், அன்புச்செழியன் வீடு அலுவலகங்களில் நடந்த சோதனையில் 65 கோடி ரூபா பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணத்தை வருமான வரி துறை கைப்பற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.