கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் Nurses முகங்களுக்கு என்ன ஆனது? கண்கலங்க வைக்கும் புகைப்படங்கள்

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவி வரும் செவிலியர்கள் முகத்தில் பல மணி நேரம் இறுக்கமாக இருக்கும் முகமூடியை கழட்டிய பின்னர் அவர்கள் முகம் இருக்கும் நிலையை காட்டும் புகைப்படங்கள் வெளியாகி மனதை உருக்கியுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் இரவு பகல் பாராமல் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சீனாவில் இருப்பவர்கள் பலரும் முகமூடி அணிந்தபடியே இருக்கிறார்கள்.

காரணம் கொரோனா ஒருவரின் சுவாசத்தில் இருந்து இன்னொருவருக்கு உடனடியாக பரவுவதால் அப்படி இருக்கின்றனர்.

முக்கியமாக வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் பல மணி நேரம் முகத்தில் முகமூடியை அணிந்துள்ளனர். அப்படி பல மணி நேரம் முகமூடியை அணிந்துள்ள செவிலியர்கள் அதை கழட்டும் போது அவர்களில் பலரின் முகத்தில் வீக்கம், காயம் ஏற்பட்டுள்ளது.

இதோடு முகத்தில் தழும்பும் ஏற்பட்டுள்ளது, இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி கோடிக்கணக்கான மக்களின் மனதை நெகிழவைத்துள்ளது.

இந்த செவிலியர்கள் அனைவரும் உண்மையான ஹீரோக்கள் என பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.