3 மாத பச்சிளம் குழந்தையின் மீது மண்ணெண்ணையை ஊற்றி….. தாயாரின் கொடூர செயல்..

இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு அருகேயுள்ள வடகஞ்சேரி பகுதியை சார்ந்தவர் மனோஜ். இவரது மனைவியின் பெயர் நிஷா. இவர்கள் இருவரும் ஐதராபாத்தில் இருக்கும் பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வரும் நிலையில், நிஷா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இதனையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக வடகஞ்சேரியில் இருக்கும் தந்து தாயாரின் இல்லத்திற்கு வந்து இருந்துள்ளார். பின்னர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக நிஷாவுக்கு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

மேலும், மனோஜ் ஐதராபாத்தில் இருக்கும் இல்லத்தில் வசித்து வந்த நிலையில், நிஷா மற்றும் அவரது குழந்தையை மனோஜின் தந்தை கவனித்து வந்துள்ளார். இந்த சமயத்தில், நேற்று மலை நேரத்தில் மனோஜின் தந்தை வெளியே சென்றுள்ளார்.

வீட்டில் தனியாக இருந்த 3 மாத பிஞ்சு பெண் குழந்தையின் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்து, பின்னர் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்து தற்கொலை செய்துள்ளார்.

இந்த தற்கொலையில் இருவருமே உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து இருந்த நிலையில், வெளியே சென்றிருந்த மனோஜின் தந்தை இவர்களின் உடல் கருகி இருப்பதாய் கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.

பின்னர் இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.