யாழ் நகரில் நீண்டநாள் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் வசமாக சிக்கினார்!

யாழ் நகரில் நீண்ட காலமாக துவிச்சக்கர வண்டிகளை திருடிச் வந்த சந்தேகநபர் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டார்.

யாழ்ப் நகர்ப்பகுதிகளில் தொடர்ச்சியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டிகளே இவ்வாறு திருடப்பட்டு வந்தன.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பலர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.

இதற்கமைய பொலிஸார் துவிச்சக்கரவண்டி திருடர்களை பிடிப்பதற்காக சில நாட்களாக கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் இன்று சைக்கிள்களை திருடும் சந்தேகத்தின் பேரில் நல்லூர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் கைதான நபரிடமிருந்து 10 துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது எட்டு பெண்களுக்கான துவிச்சக்கர வண்டியும், இரண்டு ஆண்களுக்கான துவிச்சக்கர வண்டிகளும் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்