13 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த காமுகர்கள்…..

தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் நல்லிசெட்டிபாளையம் பகுதியை சார்ந்தவர் அரவிந்த் (வயது 23). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில், இவரது வீட்டின் அருகே 13 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார்.

சிறுமி தற்போது அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நேரத்தில், சிறுமி வீட்டின் வெளியே நின்று கொண்டு இருந்த நேரத்தில், அரவிந்த் சிறுமியை அழைத்துள்ளான்.

பக்கத்து வீட்டில் இருக்கும் நபர் என்ற காரணத்தால் சகோதரன் முறையில் சிறுமி செல்லவே, சிறுமியை ஏதும் கூறாமல் கையை பிடித்து அழைத்து அங்குள்ள சோளக்காட்டிற்கு சென்றுள்ளான்.

சோளக்காட்டிற்கு சென்றவுடன் சிறுமியை வலுக்கட்டாயமாக சோளக்காட்டின் உட்பகுதிக்கு தூக்கி சென்ற நிலையில், அரவிந்தை பின் தொடர்ந்து வந்த காம கொடூரன் காளிதாஸ் என்பவனும் சிறுமியை பின் தொடர்ந்து வந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளான்கள்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி செய்வதறியாது அலறவே, சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் பதறியபடி வந்ததை அடுத்து, அரவிந்த் மற்றும் காளிதாஸ் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளான்.

இதனையடுத்து சிறுமியை மீட்ட அக்கம்பக்கத்தினர் பெற்றோரிடம் சிறுமியை மீட்டு ஒப்படைத்த நிலையில், சிறுமி கொடூரங்களின் செயலை கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த அரவிந்த் மற்றும் காளிதாஸ் ஆகியோரை கைது செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.