ஹிந்தி பிக்பாஸில் தமிழ் பட நடிகை செய்த அதிர்ச்சி செயல்..!

நட்பு, காதல், மோதல், சண்டை, அடிதடி என எப்போதும் சுவாரஸ்யமான பல விஷயங்கள் எப்போதும் நடக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் தான்.

தற்போது ஹிந்தியில் நடந்து வரும் 13வது பிக்பாஸ் சீசனில் பல விஷயங்கள் நடந்து வருகிறது. அதில் முக்கிய போட்டியாளராக இருந்தார் நடிகை மதுரிமா. ஒரிசாவை சேர்ந்த அவர் இதற்கு முன்பு ஒரு தமிழ் படத்திலும் நடித்துள்ளார். ஆர்கே ஹீரோவாக நடித்த ‘எல்லாம் அவன் செயல்’ என்ற படத்தில் நெகடிவ் வேடத்தில் நடித்திருந்தார் அவர்.

மதுரிமா துளி பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போது விஷால் ஆதித்ய சிங் என்ற போட்டியாளருடன் சண்டை போட்டுள்ளார். ஆரம்பத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் மீது தண்ணீர் ஊற்றி சண்டை போட ஒருகட்டத்தில் மதுரிமா கடும் கோபமாகி அவரை frying pan கொண்டுசென்று அவரை தாக்கியுள்ளார்.

இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சித்தொகுப்பாளர் சல்மான் கான் நடிகை மதுரிமாவை வீட்டில் இருந்து வெளியேற்றியுள்ளார்.