சித்தி 2 சீரியலில் இணைந்த பிரபல நடிகர்!

சின்னத்திரை சீரியல் உலகில் பெரும் புரட்சி செய்தவர் நடிகை ராதிகா. பல சீரியல்களை தயாரித்து நடித்து வெற்றிகண்டவர். சினிமாவுக்கு நிகராக சீரியலை வளர்த்ததில் இவருக்கு பங்குண்டு.

அவரின் ஹிட் சீரியல்களில் ஒன்றான சித்தி தொடரின் இரண்டாம் பாகம் வரும் ஜனவரி 27 முதல் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.

இந்த சீரியலில் பொன்வண்ணன், மகாலட்சுமி என பலர் நடித்துள்ளார்கள். தற்போது வந்துள்ள புரமோவில் பிரபல நடிகர் பாக்யராஜும் இணைந்துள்ளார்.

அவருக்கு என்ன ரோல் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்….