எம்ஜிஆருக்கு ஓர் ஜெயலலிதா போல், அண்ணனுக்கு மீரா மிதுன்..

மீரா மிதுனை பற்றி அறிமுகம் ஒன்றும் தேவையில்லை. தினம் தினம் எதோ ஒரு சர்ச்சையில் சிக்கி அதையும் பிரபலபடுத்தி வருபவர் தான் மீரா மிதுன்.

இந்த நிலையில், மீரா மிதுன் அவரது டிவிட்டரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். இதனை பார்த்த சிலர் வாய்ப்பே இல்ல ராஜா என்றும், அவர் குடும்பத்துல கும்மி அடிச்சிட்டு போயிடாத தாயீ என்றும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

இன்னும் சிலரை உச்சக்கட்ட கமெண்டாக சென்று, எம்ஜிஆர் க்கு ஓர் ஜெயலலிதா டா அண்ணனுக்கு இந்த மீரா மிதுன் டா என்றும் தாறுமாறாக கமெண்டில் கிண்டல் செய்து வருகிறார்கள்.

மேலும், முன்னதாக அரசியலில் களமிறங்க ஆர்வம் இருப்பதாக தெரிவித்திருந்த மீரா மிதுன் எந்த கட்சியில் இணைய போகிறேன் என்பது குறித்து வாய்திறக்கவில்லை. இந்த செல்பியை பார்த்தவர்கள் சீமானுடன் இணைவார் என்று சமூகவலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.