டிக் டாக் நாடக காதல்.. 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்..!!

தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் வட்டம் பகுதியை சார்ந்த 15 வயதுடைய சிறுமி, பத்தாம் வகுப்பு பயின்று வரும் நிலையில், டிக் டாக்கில் பல விடீயோக்களை பதிவு செய்து அதிகளவு நேரத்தினை செலவு செய்து வந்துள்ளார்.

இவரது விடீயோக்களை தொடர்ந்து பார்த்து கொண்டு வந்த பல்லடம் பகுதியை சார்ந்த வேல்முருகன் என்ற வாலிபர், சிறுமியோடு நட்புடன் பழகி வந்துள்ளான். இவர்களின் பழக்கத்தை உறுதிப்படுத்தும் விதமாக பல நாடக காதல் கவிதையை அனுப்பி வந்துள்ளான்.

இது பின்னாளில் காதலாக மாறவே, சிறுமியை அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளான். இதன்போது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறிய காம கொடூரன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளான்.

இந்த நிலையில், சிறுமி கர்ப்பமானதை அடுத்து., சிறுமியின் நடத்தையில் உள்ள சந்தேகத்தை அடுத்து பெற்றோர் மேற்கொண்ட விசாரணையில் பகீர் தகவலாக மேற்கூறியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தனது வாழ்க்கை நாடககாதலால் பறிபோனதை பின்னாளில் உணர்ந்த சிறுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.

சிறுமி கோயம்புத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இது தொடர்பாக தகவலறிந்த காவல் துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பதிவு செய்தனர்.

இதன் அடிப்படையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வேல்முருகனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், சிறுமி சிகிச்சை பலனின்றி கடந்த 27 ஆம் தேதியன்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில், சிறுமியை சீரழித்த கொடூரன் ஜாமினில் வெளியாக வாய்ப்புள்ளது என்ற செய்தியை அறிந்த சிறுமியின் பெற்றோர்கள், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கூறி திருப்பூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தற்போது மனு அளித்துள்ளனர்.