தாயாரை கொலை செய்த அவெஞ்சர்ஸ் பட நடிகை.. விசாரணையில் பேரதிர்ச்சி..!!

அவெஞ்சர்ஸ், கேப்டன் அமெரிக்கா போன்ற படங்களில் சிறிய வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை மோலி பிட்ஸ்ஜெரால்ட். இவர் இதனைப்போன்று பல ஹாலிவுட் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

அவெஞ்சர்ஸ், கேப்டன் அமெரிக்கா போன்ற படத்தில் நடித்தது மட்டுமல்லாது, உதவி இயக்குனராகவும் பணியாற்றி வந்துள்ளார். மேலும், பல சிறிய பட்ஜெட் உள்ள படங்களை தயாரித்தும் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், கடந்த மாதத்தின் போது மோலி தாயார் பெட்ரீஷியா (வயது 68), அங்குள்ள கென்சாஸ் நகர் பகுதியில் கொலை செய்யப்பட்டு இருந்துள்ளார். இது தொடர்பாக தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மேலும், உடன் இருந்த மோலி பிட்ஸ்ஜெரால்ட்க்கும் காயம் இருப்பதாக தெரியவந்ததை அடுத்து, காயமடைந்து இருந்த மோலி பிட்ஸ்ஜெரால்ட் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார்.

இது தொடர்பாக காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மோலி பிட்ஸ்ஜெரால்ட் அவரது தாயாரை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மோலி பிட்ஸ்ஜெரால்ட் சிறையில் அடைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இது தொடர்பான விசாரணையில், பெட்ரீஷியா பல வருடமாக ஹாஸ்டன் நகரில் அவரது மகனின் இல்லத்தில் வசித்து வந்துள்ளார் நேற்றும், மகள் கன்சாஸ் நகரில் குடியேற முயற்சித்த நேரத்தில் சொந்த மகளால் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.