நேற்றைய இந்திய – ஆஸ்திரேலிய போட்டியில் அமைதியாக நடத்த கலவரங்கள்….

இந்தியாவிற்கு வந்துள்ள ஆஸ்திரேலிய அணியானது ஆரோன் பிஞ்ச் தலைமையில் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விலடவுள்ளது. இந்தியா – ஆஸ்திரேலிய அணிக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்திய அணி விராட்கோலியன் தலைமையில் இம்மாதத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் 2 – 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஒருநாள் போட்டியிலும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் 2 – 1 என்ற கணக்கில் வெற்றியை கைப்பற்றியது.

இந்த நம்பிக்கையுடன் இந்திய அணி இன்றைய போட்டியில் களமிறங்கியுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியை பொறுத்த வரையில் உலககோப்பைக்கு பின்னர் களம்காணும் முதல் போட்டியாக இது இருக்கிறது. மேலும், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து போட்டிக்கு எதிரான தொடரினை வெற்றிபெற்ற உற்சாகத்துடன் ஆஸ்திரேலிய அணி களம்கண்டு வருகிறது. இன்றைய போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை உருவாகியுள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணியின் சார்பாக ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், ரிசப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், முகமது சாமி, பும்ரா ஆகியோரும் விளையாடுகின்றனர்.

ஆஸ்திரேலிய அணியின் சார்பாக டேவிட் வார்னர், ஆரோன் பின்ச், மரன்ஸ் லபுஸ்சாக்னே, ஸ்டீவன் ஸ்மித், அஷ்டின் டர்னர், அலெக்ஸ் காரே, அஸ்டோன் அகர், பட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா ஆகியோர் விளையாடுகின்றனர். இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியானது பந்துவீச்சினை தேர்வு செய்துள்ளது. இதன் மூலமாக இந்திய பேட்டிங் செய்து வந்த நிலையில், 49.1 ஓவர்களின் முடிவில் 255 ரன்கள் எடுத்து இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற முனைப்புடன் ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி துவக்கியுள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர்களாக துவக்கத்தில் களமிறங்கிய டேவிட் வார்னர் – ஆரோன் பின்ச் ஜோடி அதிரடியாக ஆட வேண்டிய இடத்தில் அதிரடியாகவும், நிதானமாக ஆட வேண்டிய இடத்தில் நிதானமாகவும் விளையாடியது.

இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காது தொடர்ந்து ஆடி வந்த நிலையில், டேவிட் வார்னர் 112 பந்துகளில் 128 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனைப்போன்று ஆரோன் பின்ச் 114 பந்துகளில் 110 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்த ஆட்டத்தில் இவர்கள் இருவரும் சதமடித்து விளாசினார். இவர்களில் டேவிட் வார்னர் 3 சிக்ஸர்களும், 17 பவுண்டரிகளையும் அடித்து நொறுக்கினர். இதனைப்போன்று ஆரோன் பின்ச் 2 சிக்ஸர்களும், 13 பவுண்டரிகளும் விளாசியிருந்தானர். நேற்றைய போட்டியின் போது இணையத்தளத்தில் நெட்டிசன்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த வீரர்களின் பெயரை குறிப்பிட்டு இருந்து ட்ரெண்ட் செய்து கொண்டு இருந்தனர்.


இந்த நிலையில்,. நேற்றைய இணையதள ட்ரெண்டிங்கில் #IndVsAus என்ற குறிப்பு ட்ரெண்டாகிக்கொண்டு இருந்த நேரத்தில், தல தோனியின் ரசிகர்களும் தோனி மீண்டும் வேண்டும் என்ற வாசகத்துடன் ட்ரெண்ட் செய்து கொண்டு இருந்தனர். இந்த நேரத்தில், இந்திய குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பலரும் அதற்கான ஆடையை அனைத்து பணம் செலவு செய்து விளையாட்டு மைதானத்திற்குள் அமர்ந்து எதிர்ப்புகளை பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.