இன்றைய நாளில் இந்த ராசிக்காரர்களுக்கு இதை செய்தால் இவ்வளவு நன்மையா ? ? இதோ இன்றைய ராசிபலன் (15.01.2020)

(ஜோதிட அன்பர்களுக்கு, இதயம் கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்)

ஸ்ரீ விகாரி ஆண்டு – தை 1 – புதன்கிழமை (15.01.2020)
நட்சத்திரம் : பூரம் காலை 9.42 வரை பின்னர் உத்திரம்
திதி : பஞ்சமி மாலை 4.03 வரை பின்னர் சஷ்டி
யோகம்: அமிர்த யோகம்
நல்லநேரம்: காலை 9.30 – 10.30 / மாலை 3.00 – 4.00

புதன்கிழமை சுப ஓரை விவரங்கள்
(காலை 9 முதல் 10 வரை, பகல் 1.30 – 3.00 வரை, 4 முதல் 5 வரை, இரவு 9 முதல் 10 வரை)
சுபகாரியங்கள் : கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள்

மேஷம்

மேஷராசி அன்பர்களே!

இன்று காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தெய்வப் பிரார்த்தனை களை நிறைவேற்றி மகிழ்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கி டையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். லாபமும் அதிகரிக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர்பார்த்த பணவரவுக்கு வாய்ப்பு உண்டு..

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் நன்மைகள் ஏற்படும்.

ரிஷபம்
ரிஷபராசி அன்பர்களே!

வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செலவுகளைச் சமாளிக்கும் அளவு பணவரவு இருக்கும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுபச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும்.

மிதுனம்
மிதுனராசி அன்பர்களே!

அதிர்ஷ்டகரமான நாள். மனதில் தைரியம் அதிகரிக்கும். இன்று நீங்கள் தொடங்கும் புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். வீட்டில் மகிழ்ச்சி தாண்டவமாடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சி சாதகமாக முடியும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.

கடகம்
கடகராசி அன்பர்களே!

தந்தைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்களால் ஓரளவுக்கு நன்மை ஏற்படும். சிலருக்கு எதிர் பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைப்பது மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பணியாளர்களால் சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சி சாதகமாக முடியும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சுபச்செலவுகள் ஏற்படக்கூடும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.

சிம்மம்
சிம்மராசி அன்பர்களே!

சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். துணிச்சலாக முடிவெடுப்பீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். உறவினர்கள் வருகையால் பணிச்சுமை அதிகரித்தாலும் மகிழ்ச்சியாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப்பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம்.

கன்னி
கன்னிராசி அன்பர்களே!

இன்று சற்று பொறுமையுடன் செயல்படவும். தாய்வழி உறவினர்கள் வருகை அதிகப்படியான செலவுகளை ஏற்படுத்தும். பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மாலையில் உறவினர்கள் வருகை குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலையை ஏற்படுத்தும். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வது நல்லது.

துலாம்
துலாராசி அன்பர்களே!

மகிழ்ச்சி தரும் நாளாக அமையும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதை இன்று தவிர்ப்பது நல்லது. மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

விருச்சிகம்
விருச்சிகராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத் தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். மாலையில் குடும்பத்துடன் உறவி னர், நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர் பார்த்தபடியே இருக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் ஆதாயம் ஏற்படக்கூடும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

தனுசு
தனுசுராசி அன்பர்களே!

பல வகைகளிலும் பொறுமையுடன் சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள். ஆனாலும், தங்கள் மனதில் ஏற்பட்ட சிறுசிறு குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வாழ்க்கைத் துணையின் பணிகளில் உதவி செய்வீர்கள். பிள்ளைகள் உங்கள் விருப்பத்தின்படி நடந்துகொள் வார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும். விற்பனையை அதிகரிப்ப தில் பணியாளர்கள் உற்சாகம் காட்டுவார்கள்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருக்கவும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படக்கூடும்.

மகரம்
மகரராசி அன்பர்களே!

இன்று எந்த ஒரு விஷயத்திலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். புதிய முயற்சி களைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படக்கூடும். தாயின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோத ரரிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் கூடுதல் லாபம் கிடைக்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் சங்கடம் ஏற்படும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

கும்பம்
கும்பராசி அன்பர்களே!

பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே மற்றவர்களின் தலையீடு காரணமாக பிணக்குகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வெளியூர்களில் உள்ள பிள்ளை அல்லது பெண்ணின் எதிர்பாராத வரவு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிப்பதுடன் பணியாளர்களால் செலவுகளும் ஏற்படும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கியமான விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு உகந்த நாள்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மீனம்
மீனராசி அன்பர்களே!

மன உறுதியுடன் செயல்படுவீர்கள். எதிரிகள் பணிந்துபோவார்கள். புதிய முயற்சி வெற்றிகரமாக நிறைவேறும். குடும்பம் தொடர்பாக எடுக்கும் முக்கிய முடிவு சாதகமாக முடியும். சகோதரர்கள் உங்களிடம் உதவி கேட்டு வருவார்கள். தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். சக வியா பாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.