மட்டக்களப்பு ஊறணி பகுதியில் ஆலய உண்டியல் உடைத்த 16 வயது சிறுவன் மடக்கிப் பிடிப்பு!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊறணி பகுதியில் ஆலய உண்டியலை உடைத்து திருட முற்பட்ட சிறுவன் ஒருவன் பொதுமக்களினால் மடக்கிபிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான். நேற்று (13) இந்த சம்பவம் நடந்தது.

கொக்குவில் பகுதியில் உள்ள அம்மன் ஆலயம் ஒன்றில் திருட முற்பட்ட 16 வயது சிறுவனே மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளான். சிறுவன் ஆலய உண்டியலை உடைத்துக் கொண்டிருந்தபோது, அந்த பகுதி இளைஞர்கள் அதை அவதானித்து, சிறுவனை மடக்கிப் பிடித்துள்ளனர்.

செங்கலடியை சேர்ந்த சிறுவனே சிக்கினான்.  மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.