கடும் கோபத்தில் கனடா பிரதமர்… காரணம் இதுதானாம்..!!

உக்ரேனிய பயணிகள் விமானம் தற்செயலாக சுட்டு வீழ்த்தப்பட்டது என்கிற கூற்றில் தனக்கு சந்தேகம் இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் 176 பேருடன் விபத்துக்குள்ளான உக்ரேனிய பயணிகள் விமானம், ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலால் நடந்ததாக விண்வெளிப்படை தளபதி அமிராலி ஹாஜிசாதே நேற்று தகவல் வெளியிட்டிருந்தார்.

மேலும் அவர், இதுபோன்ற விபத்தை நான் பார்த்தது இல்லை. இதற்கு நான் இறந்திருக்கலாம் என வேதனை தெரிவித்தார்.

இந்த நிலையில் ஒட்டாவாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ, உக்ரைன் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் பிஎஸ் 752 மீதான தாக்குதல் உண்மையில் ஒரு விபத்து தானா என்பது இன்னும் உறுதிசெய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்த சம்பவம் குறித்து ‘கனடாவிலும் உலகிலும் இன்னும் பல கேள்விகள் உள்ளன’. அவை அனைத்துமே பதிலளிக்கப்பட வேண்டிய கேள்விகள்.

‘ஒரு முழுமையான மற்றும் நிறைவான விசாரணை நடத்தப்பட வேண்டும்’. ‘இதுபோன்ற கொடூரமான சோகம் எவ்வாறு நிகழ்ந்திருக்கும் என்பது குறித்து எங்களுக்கு முழு தெளிவு தேவை.’

“இந்த விசாரணையில் கனடா பங்கேற்பது முற்றிலும் அவசியம் என்று நான் ஜனாதிபதி ரூஹானிக்கு மீண்டும் வலியுறுத்தினேன்,” எனக்கூறினார். ‘ஈரானிய அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம்’ எனக்கூறிய அவர், இந்த சம்பவத்தால் கடுங்கோபத்தில் இருப்பதாகவும் கூறினார்.

முன்னதாக உக்ரேனிய விமான விபத்தில் 60 க்கும் மேற்பட்ட கனேடியர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.