காதலியை கப்பலில் இருந்து புரபோஸ் செய்த ஹர்திக் பாண்டியா..

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. பாண்ட்யா அவரது காதலியான நடாவுடன் டேட்டிங் செய்து வருவதாக சில காலமாகவே தகவல்கள் சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருந்தன.

இந்நிலையில் நடிகை நடாசா ஸ்டான்கோவிச் உடனான தனது காதலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். புத்தாண்டு தினத்தன்று ஹர்திக் பாண்ட்யா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலியுடன் கைப்பிடித்தபடி ஒரு படத்தைப் பகிர்ந்து கொண்டார். அதில், ‘‘எனது பட்டாசுடன் இந்த ஆண்டைத் தொடங்குகிறேன்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு கிரிக்கெட் பிரபலங்களான விராட் கோலி, யுவேந்திர சாஹல் உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அங்கு ஹர்திக் நிச்சயதார்த்த மோதிரத்தையும் காதலிக்கு போட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் இருவரின் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள்.

 

View this post on Instagram

 

Mai tera, Tu meri jaane, saara Hindustan. ?? 01.01.2020 ❤ #engaged

A post shared by Hardik Pandya (@hardikpandya93) on