நட்சத்திர ஹோட்டலில் மனைவியுடன் புத்தாண்டு கொண்டாட்டம்: டோனி வீடியோ

இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனி, தன்னுடைய மனைவி மற்றும் நண்பர்களுடன் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் புத்தாண்டு கொண்டாடி வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உலகக்கோப்பை தொடருக்கு பின், டோனி எந்த ஒரு போட்டிகளிலும் கலந்து கொள்ளாமல் ஓய்வில் இருந்தார். அதன் பின் திரும்பிய பின்னரும், அவரை தேர்வு குழுவினர் எடுக்காமல், ரிஷப் பாண்ட் மற்றும் சஞ்சு சாம்சான் போன்ற இளம் விக்கெட் கீப்பர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.

இதிலும் பாண்ட்டிற்கே தேர்வு குழு அதிக வாய்ப்பு கொடுப்பதாகவும், சஞ்சு சாம்சனை பெயருக்கு அணியில் எடுத்துவிட்டு, ஓரங்கட்டுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

இதற்கிடையில் டோனிக்கு இந்த ஆண்டின் முதல் சர்வதேச கிரிக்கெட் தொடரில் விளையாட ஆரம்பிப்பார் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் டோனி மற்றும் அவருடைய மனைவி ஷாக்சி இருவரும் நட்சத்திர ஹோட்டலில் தங்களுடைய நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். இதில் எப்போதும் பார்க்காத வகையில், டோனி, தன் மனைவியை கட்டியணைத்து ஆடுகிறார், அப்போது ஷாக்சி ஏதோ மொபைல் போனில் எடுக்க வர, அதெல்லாம் வேண்டாம் என்று டோனி மறுப்பது போன்று உள்ளது.

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.