இன்று முதல் வைத்தியசாலையில் நோயாளர்களைப் பார்வையிடும் நேரத்தில் மாற்றம்!!!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களை, பொதுமக்கள் பார்வையிடும் நேரத்தில் இன்று (01) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், மாலை 04 மணிமுதல் 05 மணி வரையாக இருந்த பார்வையிடும் நேரம், மாலை 05 மணிமுதல் 06 மணி வரை என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, காலை 06 மணி முதல் 07 மணி வரை நண்பகல் 12 முதல் 01 மணிவரையான நேரங்கள் மாற்றத்துக்கு உட்படவில்லை.

அந்நேரங்களில் வழமைபோன்றே பொதுமக்கள், நோயாளர்களைப் பார்வையிட முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.