வெறிக்க, வெறிக்க பார்த்த கவின்.. கொண்டுகொள்ளாமல் சென்ற லொஸ்லியா.!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 105 நாட்களாக மிகவும் விறுவிறுப்பாக, வெற்றிகரமாக சென்றது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருந்து போட்டி நடைபெற்றது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் லொஸ்லியா.

லொஸ்லியா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த மறுநாளே இவருக்கென ஏராளமான ரசிகர்பட்டாளமும், ஆர்மியும் உருவானது. மேலும் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் எப்பொழுதும் கலகலப்பாக இருந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு கவின் மீது காதல் ஏற்பட்டு பல பிரச்சனைகளை சந்தித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சந்தித்து கொள்ளவில்லை.

அண்மையில் சென்னையில் நடந்த பிரபல விருது வழங்கும் விழா ஒன்றுக்கு வருகை தந்திருந்த லொஸ்லியா விருது வாங்க செல்லும் போது வரிசையில் இருந்த கவினை கண்டுகொள்ளாமல், கவின் பக்கத்தில் இருந்த ஒருவருக்கு கை கொடுத்துவிட்டு சென்றார். இந்த செயல் கவின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.