நடந்த முடித்த கா.பொ.த உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த வாழைச்சேனை மாணவர்கள்..!!

நடந்த முடித்த கா.பொ.த உயர்தரப் பரீட்சையில் வாழைச்சேனையின் பெயரை மீண்டும் மாவட்டத்தில் முன்னிலைக்கு எடுத்துச் சென்ற மாணவர்களுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் விஜிதன் குருஷாந் எனும் மாணவன் கணிதத்துறையில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.

அதேபோல வாழைச்சேனையை சேர்ந்த சஞ்சய் உயிரியல் துறையில் மாவட்ட மட்டத்தில் நான்காம் இடத்தினை பெற்று தமது கிராமத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இந்நிலையில் தமது கிராமத்திற்கு பெருமை தேடிக்கொடுத்த குறித்த மாணவர்கள் இருவருக்கும் வாழைச்சேனை மக்கள் வாழ்த்துக்களைக் கூறிவருகின்றனர்.

வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசியபாடசாலை மாணவன் விஜிதன் குருஷாந் மாவட்டத்தில் முதலாம் நிலையைப் பெற்று சாதனை படைத்த மாணவன் கூறுகையில்

2019ஆம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றி வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசியபாடசாலை மாணவன் விஜிதன் குருஷாந் மாவட்டத்தில் முதலாம் நிலையைப் பெற்று பொறியியல் பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இவர் திரு.திருமதி.விஜிதன் பரமேஸ்வரி தம்பதிகளின் சிரேஸ்ட்ட புதல்வனான இவரின் தந்தை கோறளைப்பற்று வடக்கு வாகரைக் கோட்டத்திலுள்ள அதிகஸ்டப் பிரதேச பாடசாலையான மட்.ககு.கிரிமிச்சேனை அ.த.க.பாடசாலையின் அதிபராக பணிபுரிந்து வருகின்றார்.

தாயார் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சுருக்கெழுத்தாளராகவும் பணிபுரிந்து வருகின்றார்.

குறித்த விடயம் தொடர்பில் கல்லூரியின் முதல்வரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது விஜிதன் குருஷாந் கல்லூரியின் அனைத்து செயற்பாடுகளிலும் திறமைகாட்டி முன்மாதிரியாக செயற்பட்டு வருபவர்.

இவர் ஆங்கில தினப் போட்டிகள், விளையாட்டு, இசைக்கருவிகளை வாசித்தல், நல்ல குரல் வளம் மிக்கவராக திறன்களை வெளிப்படுத்தி வருபவர்.

2010இல் தோற்றி புலமைப் பரிசில் பரீட்சையில் 181 புள்ளிகளையும் மாவட்ட மட்டத்தில் 2மு நிலையையும் பெற்று சாதனை படைத்தவர்.

2016இல் நடைபெற்ற க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் தோற்றி 9யு சித்திகளைப்பெற்றுள்ளார்.

எல்லாவற்றுக்கும் மேலாக தான் சார்ந்த மண் மற்றும் கல்லூரியின் நற்பெயரையும் போற்றி, ஆசிரியர்களின் நல் அபிமானத்தையும் பெற்ற மாணவராக மிளிர்ந்து வருகின்றார். இவரது திறமைகளை வெகுவாகப் பாராட்டுவதோடு, சிறந்த எதிர்காலம் அமையவும் பெற்றோர், கற்பித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்தும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

விஜிதன் குருஷாந் குறிப்பிடுகையில்

கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பரீட்சையில் வெற்றிபெற என்ன ஆலோசனை சொல்ல விரும்புகின்றீர்கள்?

முதலில் மாணவர்கள் தமக்கு விருப்பமான துறையை யார் தூண்டுதலும் இன்றி தெரிவுசெய்ய வேண்டும். தெரிவு செய்த துறையில் முழு விருப்பத்துடன் கற்க வேண்டும்.

குழப்பமான பிரிவுகள், சந்தேகங்களை அன்றே விளங்கிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

வகுப்பு ஆசிரியர்கள் கற்பிப்பது விளங்காதவிடத்து வேறு ஆசிரியரிடம் வகுப்புச் செல்ல வேண்டுமே தவிர ஒன்றுக்கு மேற்பட்ட வகுப்புக்களுக்குச் செல்வது வீண். சிறிய சந்தேகங்களைத் தீர்க்க இணையம் ஒரு சிறந்த ஆசான்.