மட்டக்களப்பு மாவட்டத்தில் வியாழேந்திரன் தலைமையில் அவசர கலந்துரையாடல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களை முகம் கொடுப்பது குறித்த அவசர கலந்துரையாடல் இன்று (24) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ச.வியாழேந்திரன் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது.

மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார், பரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்ட பணிகள் மிகவும் காத்திரமானதாக அவதானிக்கபட்டதாகவும், சிறப்பான மீட்பு பணியில் ஈடுபட்டதாகவும் அரசாங்க அதிபர் உட்பட அனைத்து உத்தியோகத்தர்களையும் வியாழேந்திரன் பாராட்டியிருந்தார்.

மட்டக்களப்புக்கு தேவையான அபிவிருத்தி செயல் திட்டங்களை எவ்வாறான தடைகளுமின்றி தொடர்ந்து எமது புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்க ஆயத்தமாக உள்ளோம்.

இதனைத்தவிர நாட்டில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பினை ஜனாதிபதி முன்னெடுக்கவுள்ளார். இத் திட்டத்தில் கல்விப் பொது சாதாரண தரத்தில் சித்தியடையாத வறுமை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு முதல் இடம் வழங்கவும் இதற்கான சுற்று நிருபம் விரைவில் வெளிவரவுள்ளதாவும் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவருமான ச.வியாழேந்திரன் தெரிவித்தார்.