முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பகுதியில் மண் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது!

மண் அகழ்வுக்கான அனுமதி பத்திரமின்றி பேராற்று பகுதியில் 3 உழவு இயந்திரங்களில் மண் ஏற்றிக்கொண்டிருந்த நபர்களே இவ்வாறு கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைதாகிய சந்தேக நபர்களையும் 3 உழவு இயந்திரங்களையும் முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்த ஒட்டுசுட்டான் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது