பல வருடங்களுக்கு பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜோடி போடும் பிரபல நடிகை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வரும் பொங்கல் பண்டிகையில் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படம் வெளியாகவுள்ளது.

ரசிகர்கள் பலரும் இப்படத்தை காண ஆவலுடன் காத்திருக்கும் வேளையில் சிவா இயக்கும் படத்தில் ரஜினி நடிப்பதாக வெளியான செய்தி கூடுதலாக இனிப்பாக அமைந்தது.

தற்போது இப்படத்தில் ரஜினியுடன் பிரபல நடிகை மீனா நடிப்பதாக தகவல் சுற்றி வந்த வேளையில் தற்போது அது படத்தயாரிப்பு நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

பல வருடங்களுக்கு பின் இருவரும் இணைவது பலருக்கும் சந்தோஷம் தான்.