ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள அலப்பறை பார்த்தீயா? அண்ணாச்சியின் போஸ்டர்…

தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளர்களில் ஒருவர் தான் இந்த சரவணன் அருள். இவர் ஜேடி- ஜெர்ரி இயக்க இருக்கும் படம் ஒன்றில் கதாநாயகனாக அறிமுகமாகம் ஆகிறார். இந்த திரைப்படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழ் திரையுலகம் அவளோடு காத்து கொண்டிருக்கிறது.

இவர் மீது, பல்வேறு விதமான கேலி கிண்டல்களை மீறியும், தன்னம்பிக்கையுடன் கடைக்காக எடுக்கப்படும் விளம்பரங்களில் நடித்து தமிழக அளவில் மிகவும் பிரபலமானவர் சரவணன் அருள்.

இயக்குனர்கள் ஜேடி மற்றும் ஜெர்ரி. பல கோடி ரூபாய் செலவில் உருவாக இருக்கும் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள், இம்மாதம் முதலில் படத்தின் பூஜையுடன் துவங்கியது. படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ், வட இந்திய மாடல் ஒருவர் ஹீரோயினாக நடிக்கின்றார்.

 

இந்நிலையில் சரவணா ஸ்டோர்ஸ் அருள் சரவணனுக்கு ரசிகர் மன்றம் ஒன்று ஆரம்பித்துள்ளனர். இதற்கு தலைவராக தமிழ்வேந்தன் என்பவர் உள்ளார். மேலும் இந்த ரசிகர் மன்றத்தில் உறுப்பினர் சேர்க்கும் பணியும் நடைபெற்று வருவதாகவும், விருப்பம் உடையவர்கள் சம்பந்தப்பட்ட எண்ணை அணுகுமாறும் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது. இதைக்கண்ட சிலர் இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள அலப்பறை பார்த்தீயா என்று கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.