நடிகர் ரஜினியின் 168 படத்தில் ஜோடியாக நடிக்கவுள்ள நடிகையை அறிவித்தது படக்குழு.!

விஸ்வாசம் படத்திற்கு பின் இயக்குனர் சிவா யாருடன் கூட்டணி சேர்வார் என்கிற கேள்வி நீண்ட நாட்களாக இருந்து வந்த நிலையில்.

தலைவர் 168 என்ற பெயரில் நடிகர் ரஜினியை வைத்து இயக்குனர் சிவா இயக்கும் படம் பற்றிய அறிவிப்பை கடந்த அக்டோபர் மாதம் சன் பிக்சர்ஸ் வெளியிட்டது .

இந்த படம் எப்படிபட்ட படமாக இருக்கும் என சிவா ஒரு பேட்டியில் கூறியதாவது, கண்டிப்பாக இது குடும்பப் படம்தான். இருந்தாலும் இந்த படத்தில் ஆக்‌ஷன் கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்றார். மேலும், இந்த படத்தை ஆக்‌ஷன் கலந்த குடும்பப் படம் என்று சொல்லலாம் என தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், தலைவர் 168 படத்தில் ரஜினிக்கு கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிப்பார் என படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.