சில்லுனு ஒரு காதல் பாப்பாவா இது..? வேற லெவல் புகைப்படம்..!!!

தமிழில் சூர்யா நடித்த சில்லுன்னு ஒரு காதல் படத்தின் மூலமாக அறிமுகமானவர் ஷ்ரியா ஷர்மா. இவர் குழந்தை நட்சத்திரமாக இந்திய திரைப்படங்களில் ஜொலித்தவர்.  இவர் தேசிய விருது வாங்கிய நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர், ஒருசில படங்களில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார். மேலும், தெலுங்கில் நிர்மலா கான்வென்ட் என்ற படத்தில் லீட் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

குழந்தை நட்சத்திரமாக பார்த்த ஞாபகம் கண் முன்னே இருக்கும் போதே இப்படி கவர்ச்சி நாயாகியாக மாறியிருக்கிறார் ஷ்ரியா. கொள்ளை அழகு கொண்டுள்ள ஷ்ரியா நிச்சயம் வரும் ஆண்டுகளில் தென்னிந்திய சினிமாவில் பெரும் நடிகையாக வாய்ப்பிருக்கிறது என்றும் அதற்க்கான ஷ்ரியாவிடம் நடிப்பில் திறமையும் இருக்கிறது என்றும் பலரும் கூறி வருகிறார்கள்.

சில படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடித்துள்ள ஷ்ரியா தீடீரென ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடவிருப்பது பலரையும் ஷாக் ஆக்கியுள்ளது.தற்போது, கப்பலில் கவர்ச்சி உடையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மேலும் அதிர்ச்சி அளித்திருக்கிறார்.