கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாய்க்குள் பாய்ந்தது..!! மூன்று பேர் பலி..!!

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாய் தண்ணீருக்குள் பாய்ந்ததில் கணவன் மனைவி, குழந்தை உட்பட மூன்று பேர் பரிதாபமாக பலியானார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக ஆறுகள், கால்வாய்கள், ஓடைகளில் தண்ணீர் நிரம்பி பெருக்கெடுத்து ஓடி கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் அஞ்சுகண்டறையைச் சேர்ந்த அனீஷ், தனது மனைவி மஞ்சு மற்றும் ஒன்றரை வயது குழந்தை அமர்நாத்துடன் குலசேகரத்துக்கு மாருதி அல்டோ காரில் சென்றிருக்கிறார்.

அப்போது, அருகே உள்ள கடைகளில் பொருட்கள் வாங்கி விட்டு தனது வீடு நோக்கி வந்துகொண்டிருந்தார்கள். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் கோதையாறு இடதுகரை கால்வாய்க்குள் பாய்ந்தது. எதிர்பாராதவிதமாக நடந்த இந்த விபத்தில் காரில் சென்ற மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதை தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடல்களை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.